Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மரத்தை வெட்டிய தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கீழ்பம்பம் பெற்றவிலை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் சங்கர் வீட்டின் அருகே இருக்கும் பப்பாளி மரத்தை வெட்டியுள்ளார். இதனையடுத்து வெட்டிய மரத்தை வெளியே போடுவதற்காக தோளில் சுமந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது வெட்டப்பட்ட மரம் மின்வேலியின் மேல் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் மயக்கம் அடைந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சங்கரை  மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |