Categories
தேசிய செய்திகள்

மரத்தில ஏற வேண்டாம்… மகிழ்ச்சியா படிங்க…. டவர் அமைத்த சோனு …!!

சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு உதவ நடிகர் சோனு சூட் செல்போன் டவர் அமைத்துக் கொடுத்துள்ளார்.

கடந்த மாதம் 22ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அச்சமயம் அவர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுத்து நடிகர் சோனு சூட் உதவி செய்தார். அதேபோன்று ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழ்நாட்டு மாணவர்களையும் தனது சொந்த செலவில் இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அது மட்டுமன்றி சமூக வலைதளங்களில் தன்னிடம் உதவி கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கு உடனடியாக உதவி செய்தார்.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் இருக்கும் மோர்னி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் செல்போன் டவர் கிடைக்காத காரணத்தினால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பற்றி சோனு சூட்டிடன் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நடிகர் சோனு சூட் ஏர்டெல் நிறுவனத்தை அணுகி தனது நண்பர்களுடன் இணைந்து அந்த கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க உதவி செய்துள்ளார்.

சோனு சூட் செய்த இந்த உதவிக்கு மாணவர்கள் வகுப்பில் பங்கேற்று தங்களது நன்றியை வெளிப்படுத்துகின்றனர். இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, “நம் நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் தான். இதுபோன்ற சவால்கள் அவர்களது திறமைக்கு தடையாக அமைந்துவிடக் கூடாது. இனி மரங்களின் மீது ஏறாமல் மகிழ்ச்சியுடன் படிக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |