Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மரத்தில் தொங்கிய ஆடு…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

வேட்டையாடிய ஆட்டை இரவு நேரத்தில் வந்து சிறுத்தை சாப்பிடும் சிசிடிவி காட்சிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி அடிவார பகுதியான பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் பட்டு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பட்டுவின் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. இதனால் பட்டு தனது ஆட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது சிறுத்தை ஒன்று ஆட்டை அடித்து கொன்று மரத்தில் தொங்க விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த மரத்திற்கு அருகில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இந்நிலையில் இரவு நேரத்தில் மீண்டும் வந்த சிறுத்தை மரத்தில் தொங்கியவாறு கிடந்த ஆட்டை தின்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இது பொதுமக்களிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிறுத்தை ஊருக்குள் நுழையும் நிலை வந்தால் அதனை கூண்டு வைத்துப் பிடிப்போம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |