Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மரண அடி வாங்கி சறுக்கல்…! 6ஆம் இடத்தில் மும்பை…. மைனஸில் ரன் ரேட்….!!

கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி 4ஆம் இடத்தில இருந்து 6ஆம் இடத்திற்கு சென்றது.

நேற்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் நான்காவது இடத்தில் இருந்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆறாவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 55 ரன்னும், ரோகித் சர்மா 33 ரன்னும் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் பெர்குசன் 2விக்கெட்டும், பிரசித் 2 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய கொல்கத்தா அணி 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எளிதில் துரத்திப் பிடித்து. அந்த அணியின் தொடக்க வீரரான வெங்கடேஷ் அசத்தலான அரைசதம் ஆடி அணியை எளிதாக வெற்றி பெறச் செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த திரிபாதி 73 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெங்கடேஷ்53 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணிக்கு அதிகமான ரன் ரேட் கிடைத்தது. அதேநேரத்தில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரன் ரேட் மிகப்பெரிய அளவில் அடிவாங்கியது. இதனால் கொல்கத்தா வெற்றி பெற்று நான்காவது இடத்திற்கும்,  மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்து ஆறாவது இடத்திற்கு சென்றது. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகளும் 8 புள்ளிகளோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |