இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சே இலங்கையில் தலைமறைவாக உள்ளார். இலங்கை முழுவதும் வன்முறை கலவரமாக மாறியுள்ளது. இதனால் மகிந்த ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்துள்ளதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரதமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்,
“4 பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் ‘தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்’
என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே..
ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே..
ஓ சர்வதேச சமூகமே..!
இப்போதேனும் தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு” என்று கவிஞர் வைரமுத்து டுவீட் செய்துள்ளார்.