டிஜிபியை கொலை செய்த வாலிபரின் டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் பற்றி நேரில் ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் அமித்ஷா வந்திருக்கும் சூழலில் சிறைத்துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1992 ஆம் வருடம் ஐபிஎஸ் பிரிவு சேர்ந்த டிஜிபி லோஹியா ஜம்மு நகரில் உதைவாளா என்னும் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று அவர் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் சிறைத்துறை டிஜிபியாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் லோஹியா கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் லோஹியா வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அகமதுவின் பர்சனல் டைரியை போலீஸில் கைப்பற்றி இருக்கின்றனர். அதில் அகமது எழுதியதாக கூறப்படும் பதிவுகள் அவர் மன சோர்வடைந்து இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். யாசிப்பிற்கு சொந்தமாக கூறப்படும் டைரியில் புலா தேனா முஜே போன்ற துக்ககரமான இந்தி பாடல்களின் வரிகள் உள்ளது.
மேலும் பிற பக்கங்களில் இதயத்துடிப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய சிறு குறிப்புகள் இருக்கிறது அதில் நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன். ஜிந்தகி தோ பாஸ் தக்லீப் தேதி ஹை.சுஹன் தோ அப் மௌத் ஹி தேதி(வாழ்க்கை துன்பத்தை மட்டுமே தருகிறது மரணம் எனக்கு அமைதியை தரும்) நான் என் வாழ்க்கையை மீண்டும் தொடங்க விரும்புகிறேன் என அவர் எழுதியிருக்கிறார். மற்றொரு பக்கம் அன்புள்ள மரணமே தயவு செய்து என் வாழ்வில் வா உனக்காக நான் எப்போதும் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.