மரணமடைந்த தீவிர ரசிகரின் வீட்டிற்குச் சென்று உதவி செய்த ஜெயம் ரவியை இணையத்தில் பாராட்டுகின்றார்கள்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தார். இதன் பின் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்பொழுது அகிலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இத்திரைப்படமானது வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஜெயம் ரவியின் தீவிர ரசிகரான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் திடீரென மரணமடைந்த செய்தியை கேட்ட இவர் உடனடியாக அவரின் வீட்டிற்கு சென்று படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறி செந்திலின் உடன் பிறந்தவர்களுக்கான படிப்புச் செலவை தாமேஏற்பதாக உறுதியளித்திருக்கிறார். இவரின் இந்த செயல் தற்போது இணையத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.