பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாங்குப்பம் பகுதியில் திவ்யநாதன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொரக்கால்பட்டியில் இருக்கும் தனியார் மேல்நிலை பள்ளியில் தோட்ட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியின் முதல் மாடியில் ஜன்னல் சிலாப் பகுதியில் நின்று திவ்யநாதன் மர கிளைகளை வெட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்த திவ்யநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு திவ்யநாதனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.