Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் வாக்காளர் கையெழுத்து விழிப்புணர்வு இயக்கம்… மாவட்ட வருவாய் ஆய்வாளர் தலைமை..!!

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் ஆய்வாளர் தொடங்கி வைத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் ஆய்வாளர் முருகதாஸ் தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் சௌந்தர்ராஜன், உதவி கலெக்டர் பாலாஜி, தாசில்தார் பிரான்சுவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு மாவட்ட வருவாய் ஆய்வாளர் முருகதாஸ் “வாக்கு என் உரிமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும் ஜனநாயகம் காக்க வேண்டும்” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த பலகையில் கையெழுத்திட்டார். மேலும் அவர் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது அவசியம் என்றும், வாக்களிப்பது நமது உரிமை என்றும், அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |