பாஜக கட்சியை சேர்ந்தவரும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதி உறுப்பினருமான பாபுல் சுப்ரியோ அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் கட்சியில் இணைந்தார். இவர் மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்படும் போது தனது பதவியை இழந்தார்.
மேலும் அவருக்கு புதிய அமைச்சரவையில் பதவி வழங்கப்படாததால் வருத்தம் அடைந்தார். இந்நிலையில் அவர் அக்கட்சியில் இருந்து விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் அதில் மக்களவை உறுப்பினராகத் தனது பணியை தொடர்வேன் என்றுரைத்தார். பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மூத்த எம்.பி., டெரக் ஓ பிரைன் ஆகியோர் முன்னிலையில், பா.ஜ.க., – எம்.பி., பாபுல் சுப்ரியோ, கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் வைத்து பா.ஜ.க.விலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “வாய்ப்பு நம்மை தேடி வரும்போது அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும், அதுபோல் என்னைத் தேடிவந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன்” என்று கூறினார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியானது முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதுவரை 4 எம்.எல்.ஏ.க்கள் -ஒரு எம்.பி. என பா.ஜ.க.விலிருந்து விலகி இக்கட்சியில் இணைந்துள்ளனர். அதுபோல் தற்போது இவரும் பா.ஜ.க.விலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
பாபுல் சுப்ரியோவிற்கு மம்தா பானர்ஜியுடன் கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இந்நிலையில் அவர் தற்சமயம் பா.ஜ.க.வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்துள்ளார்.