தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 206 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 84 தொகுதிகளிலும், பிற கட்சிகள் இரண்டு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நந்திகிராம் தொகுதியில் பின்னடைவில் இருந்து மம்தா பானர்ஜியும் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.