ஹிந்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலிவுட்டில் சினிமா நட்சத்திரங்கள், மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹிந்தி சேனல் ஒன்றின் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த பிரியா ஜூனேஜா மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகண்டுள்ளார்.
இந்த செய்தி அறிந்து உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா ஊடரங்கு போடப்பட்டதிலிருந்து பிரியா ஜூனேஜா பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்ததாகவும், இதனால் அவர் கடும் மன அழுத்ததில் இருந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளார்கள். இருந்தாலும் இவரது தற்கொலைக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதாா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.