+இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் . இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகமாக செய்திகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் அநாகரிகமாக நடக்கும் மாணவர்களை நிரந்தரமாக பள்ளியைவிட்டு நீக்கினால் எதற்காக அவர்களை பள்ளியைவிட்டு நீக்கபட்டார்கள் என்பது குறித்த டிசியில் எழுதிக் கொடுப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களிடம் மாணவர்கள் இனி தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு எல்லை மீறும் மாணவர்களுக்கு TC வழங்கப்படும். ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொண்ட முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.