மலேசியா நாட்டில் மன்னர் சுல்தான் அப்துல்லா -வுக்கும் ராணி சுல்தான் அகமது ஷா-வுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலேசியா நாட்டில் மன்னர் சுல்தான் அப்துல்லா-வுக்கும் ராணி சுல்தான் அகமது ஷா-வுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் கொரோனா தொற்று அறிகுறிகள் லேசாக தான் இருப்பதாகவும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அரண்மனையில் இருந்து தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து மலேசியா மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது 17 ஆயிரத்து 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 42 லட்சத்து 19 ஆயிரமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.