சென்னையில் இந்துசமய அறநிலையத் துறை சார்பாக 30 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியானது இன்று (டிச…4) நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மங்கல நாண் வழங்கி திருமணங்களை நடத்தி வைத்தார். மேலும் 30 சீர்வரிசை பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நான் ஏற்கனவே பல்வேறு கூட்டங்களில் கூறியதுபோல அமைச்சர் சேகர்பாபு செயல்பாபுவாகவே செயல்பட்டு வருகிறார். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி கோவில் என்பது மக்களுக்காகத் தான். ஏனெனில் கோவில் யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது. இதனிடையில் அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காததால் சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள்.