Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. கொடூரமாக கொன்ற கணவர்…. நெல்லையில் பரபரப்பு…!!

பெண்ணை வெட்டிக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு வாகைகுளத்தில் கல்யாணசுந்தரம்(39) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் ராமலட்சுமி கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமியின் நடத்தை மீது சந்தேகம் வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ராமலட்சுமி தனது குழந்தைகளுடன் திருநெல்வேலியில் இருக்கும் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் மனைவியை பார்ப்பதற்காக கல்யாணசுந்தரம் அங்கு சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கல்யாணசுந்தரம் ராமலட்சுமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த ராமலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜலட்சுமியின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கல்யாண சுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |