சந்தேக புத்தி கொண்ட கணவர் தனது மனைவியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெங்களூரை சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் ஹரிகிருஷ்ணா. திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவர் ஹரிகிருஷ்ணா மனதில் தேவிகா மீது சந்தேகம் எழுந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவி மீது இருந்த சந்தேகத்தினால் கணவர் தேவிகா குளிப்பது, உடை மாற்றுவது போன்ற காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த தேவிகா அதிர்ச்சி அடைந்து தனது கணவரிடம் இச்செயலை நிறுத்துமாறு கேட்டுள்ளார். ஆனால் ஹரிகிருஷ்ணா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் தேவிகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.