புதுச்சேரியில் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், மாமனார் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த பத்மநாபன் என்பவர் தன் மகளை விழுப்புரத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாமனார் பத்மநாபன் நடத்தும் நிறுவனத்திற்கு சென்ற ரஞ்சித் பேசிக்கொண்டு இருந்தார்.
திடீரென ஆத்திரமடைந்த ரஞ்சி தனது மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். இதை பார்த்த ஊழியர்கள் பத்மநாபனை மீட்டுள்ளனர் . இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பத்மநாபன் போலீசில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் தலைமறைவான ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.