Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம்…. கல்லால் தாக்கிய கணவன்…. பயங்கர சம்பவம்….!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூரில் கார்த்திகேயன்(33). என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவரின் மனைவி காயத்ரி(26).இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு காயத்ரி திடீரென மாயமானர். கார்த்திகேயன் பல்வேறு இடங்களில் தேடியும் காயத்ரி கிடைக்கவில்லை. குழந்தைகள், கணவனை பிரிந்து நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாலைப்புதூரில் காயத்ரி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கார்த்திகேயன் தனது குழந்தைகளுடன் 2 நாட்களுக்கு முன் சாலைபுதூர் வந்தார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காயத்ரி திடீரென காணவில்லை. ஆனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் அவரை தேடினார். அப்போது சாலைப்புதூரில் உள்ள மேம்பாலம் அருகில் காயத்ரி வேறு ஒரு வாலிபருடன் பேசிக்கொண்டிருந்தார். இதனால் கார்த்திகேயன் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார். அதன்பிறகு கார்த்திகேயன் பாலம் அருகில் சென்றார். அவர் வருவதை பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து காயத்ரிடம் கார்த்திகேயன் கேட்டார். அப்போது கார்த்திகேயனுக்கும் காயத்ரிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் அங்கு இருந்த காலால் காயத்ரி தலையில் தாக்கினார். அவர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனையடுத்து கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காயத்ரி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் திண்டுகள் மருத்துவமனையில் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காயத்ரி உயிரிழந்தார. இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |