கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் கானூர் மெயின் சாலையில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவருடைய வயது 37. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி திட்டியதால், மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் கலையரசி புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.