Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி உடலில் 20காயங்கள்…! வெறி செயலில் ஈடுபட்ட கணவன்… கோவை சம்பவ பின்னணி …!!

கோயம்புத்தூரில் மனைவியை கணவன் மூன்று முறை கத்தியால் குத்திய பிறகு காரை ஏற்றி கொன்ற கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கோயம்புத்தூரை சேர்ந்த 30 வயதான கோகுல் குமார் என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த ஹரி என்பவரின் 26 வயதான மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நடைபெற்றது. சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோகுல் குமார் மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். கீர்த்தனாவும் மனித மேலாளராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்தனர். அதன்படி கீர்த்தனா கடந்த ஒரு ஆண்டுகளாக தனது பெற்றோருடன் மதுராந்தகத்தில் வசித்து வந்துள்ளார்.

கோகுல் குமார் மேல்மருவத்தூர் அருகே தனியாக வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணி அளவில் கோகுல் குமார் கீர்த்தனாவை பார்க்க சென்றுள்ளார். அங்கு அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கீர்த்தனாவை சரமாரியாக குத்தியுள்ளார். அதை தடுக்க வந்த மாமனார் ஹரியையும் குத்தியிருக்கிறார். பிறகு கீர்த்தனா தப்பிப்பதற்காக வெளியே ஓடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோகுல் குமார் தன் காரை கொண்டு அவர் மீது மூன்று முறை ஏற்றி இறக்கி கொலை செய்துள்ளார் .பிறகு காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

போலீசார் உடனே தகவல் அறிந்து விரைவாக வந்து கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் கீர்த்தனாவின் உடலில் 20க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது .மேலும் கடந்த சில மாதங்களாக கோகுல் குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவியை கொலை செய்த பதற்றத்தில் சென்ற கோகுல் குமார் அச்சரப்பாக்கத்தில் இருசக்கர வாகன ஓட்டி மீது காரை மோதியுள்ளார். தகவல் அறிந்த போலீஸ்  காயமடைந்த கோகுலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பிறகு அவர் குணமான உடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |