நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள எருமப்பட்டி வரதராஜபுரம் பகுதியில் 49 வயதான விவசாயி நடேசன் மற்றும் 43 வயதான அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் வசித்துவந்தனர். இவர் மனைவிஎம்.எஸ்.சி. பி.எட். படிப்பை முடித்துள்ளார் . இவர்கள் இருவரும் பரமத்தி அசோசியேஷன் பகுதிக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க் பின்புற பகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்தனர்.
அவரது மனைவி விஜயலட்சுமி ஆசிரியர் பணிக்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு போட்டிக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருந்தார். அப்போட்டியில் பங்கு பெறுவதற்காக அவர் மதுரைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.அவர் கணவர் நடேசன் தன் மனைவியை மதுரைக்கு அனுப்பி வைக்க இருவரும் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் நாமக்கல்லுக்கு அருகில் கீரம்பூர் டோல்கேட் டோல்கேட் பேருந்து நிறுத்தம் பகுதியை நோக்கி சென்றனர்.
அப்போது பரமத்தி திருமணிமுத்தாறு பாலம் வழியே வந்துபோது, அருகில் ஓவியம் பாளையம் பிரிவு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியே அதிவிரைவாக வந்த வாகனம் அவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதால் கணவன் மனைவி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.இந்த விபத்திற்கு காரணமான அந்த நபர் இருவரையும் காப்பாற்ற முற்படாமல் தன் வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.
சம்பவம் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பரமத்தி காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அப்பகுதி காவல் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த கணவன்- மனைவிக்கு மகன் கார்த்தி கேயன், மகள் லாவண்யா உள்ளன. மகன் கார்த்திகேயன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ 4ஆம் ஆண்டும், மகள் லாவண்யா ஈரோட்டில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.தனது பெற்றோர் இருவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை கேட்ட அப்பிள்ளைகளின் அழுகை குரல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கு காரணமான நபரையும் அவர் வாகனத்தையும் கண்டுபிடிக்க விசாரித்து வருகின்றனர்.