Categories
சினிமா தமிழ் சினிமா

“மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா”….. காரணம் இதுதானா பா….? வெளியான தகவல்….!!!!

இயக்குனர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கு இதுதான் காரணம் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்தின் வெற்றி இயக்குனர் பாலாவுக்கு மட்டுமல்லாமல் நடிகர் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் சூர்யா ஆர்யா விக்ரம் போன்ற நடிகர்கள் இவரின் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக உருவெடுத்தனர். தன் முதல் படத்தின் மூலமாக தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிய பாலா அதன்பிறகு பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற வித்யாசமான படங்களை இயக்கினார்.

இவரது படங்கள் 13 மாநில விருதுகளையும், 6 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர் இயக்குனர் பாலா. இவர் தற்போது சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தது அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2004-ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முறைப்படி விவாகரத்து பெற்றனர். இந்த செய்தியை கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் பாலா எப்பொழுதும் யாருக்கும் அஞ்சாமல் நேரடியாக வெளிப்படையாக பேசக்கூடியவர். அதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். இந்த வெளிப்படையான பேச்சுதான் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதற்கு காரணம் என்று தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் திரைப் பிரபலங்கள் பலர் விவாகரத்து அறிவித்தது திரைத் துறையில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |