ஆந்திர மாநிலத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், கணவன் அவரது உருவச்சிலையை மெழுகில் செய்து வடிவமைத்து புதுமனை புகுவிழாவில் இடம் பெறச் செய்துள்ள உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கோபால் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ் குப்தா. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். அதன்பின் ஸ்ரீனிவாஸ் குப்தா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி புதுமனை புகுவிழா நடத்தி உள்ளார். இந்த புது மனை புகு விழா நிகழ்ச்சியில் மனைவி இல்லாத கவலையை போக்குவதற்காக அவருடைய உருவத்தை மெழுகு சிலையாக வடிவமைத்து அந்த விழாவில் இடம்பெறச் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.