ராணுவ வீரர் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள சில்லமரத்துப்பட்டி பகுதியில் ராணுவ வீரரான ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், நிஷா நேத்ரா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அசாம் மாநிலத்தில் வேலை பார்த்த ரங்கநாதன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக ரங்கநாதன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மகள்கள் பள்ளிக்குச் சென்ற நிலையில் ரங்கநாதன் மனைவியிடம் வா ஒன்றாக சேர்ந்து வாழலாம் என கூறியுள்ளார். அதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட போது கோபமடைந்த ரங்கநாதன் வீட்டில் இருந்த கத்தியால் கற்பகத்தை சரமாரியாக குத்தியுள்ளார். கற்பகத்தின் அலறல் சுத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கற்பகம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் ரங்கநாதன் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரங்கநாதனை மடக்கி பிடித்தனர். பின்னர் கற்பகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரங்கநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.