திருமணமாகி 5 ஆண்டுகள் வாழ்ந்த மனைவியுடன் திட்டமிட்ட ஹனிமூனிற்கு கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்பது ஆண் பெண் வாழ்வில் நிகழும் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி. திருமணம் முடிந்த பிறகு ஒரு மனிதன் வாழ்வில் இரண்டாம் பாதியை துவங்குகிறான். அவன் தனக்காக மட்டுமல்லாமல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வாழுகின்றான். ஆனால் எல்லோருக்கும் சந்தோஷமான திருமண வாழ்க்கை அமைவதில்லை. பலரும் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான டிம் மற்றும் கேத்தரின் இருவரும் தங்களது எதிர்காலத்தை திட்டமிட்டு ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். திருமணத்திற்கு முன்பு இருந்தே தங்களது எதிர்காலத்திற்காக பணம் சம்பாதிக்க தொடங்கினர். இருவரும் ஒரு வீட்டை வாங்கி கொண்டு பிறகு தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். நினைத்தபடி இருவரும் இணைந்து ஒரு வீடு வாங்கி விட்டனர்.
இதைய டுத்து திருமணத்திற்கு பிறகு அவர்கள் ஹனிமூன் எங்கேயுமே செல்லவில்லை என்பதால் இருவரும் சேர்ந்து ஹனிமூனுக்கு எந்த பகுதிக்கு செல்வது, எங்கு தங்குவது, சுற்றி பார்ப்பது போன்ற பல திட்டங்களை வகுத்தனர். வாழ்க்கை மிகவும் அழகாக சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் கேத்ரின் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அவரது கணவர் வீட்டில் இல்லை. அதற்கு பதிலாக விவாகரத்து பேப்பர் அங்கு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கேத்ரின், இதுகுறித்து அவரிடம் கேட்டபோது எங்களுக்குள் காதல் இல்லை என்று அவர் தெரிவித்தார். பின்னர் அவர் வேறு ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்தது அவருக்கு தெரிந்து வந்தது.
இது குறித்து அவரிடம் கேட்க முயன்றபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. அந்த பெண்ணிடம் இதுகுறித்து கூறலாம் என்று சென்றபோது அந்த பெண் அலுவலகத்திலும், வீட்டிலும் இல்லை. இதுகுறித்து விசாரணை செய்தபோது அவர்கள் இருவரும் முன்னதாகத் திட்டமிட்டு வைத்திருந்த ஹனிமூன் ட்ரிப் இருக்கு ஒன்றாக சேர்ந்தது சென்றது தெரியவந்தது. இதையடுத்து மிகவும் மனமுடைந்து போன கேத்ரின் தனிமையில் வாழ ஆரம்பித்தார். பின்னர் டாக்டரிடம் காண்பித்து கவுன்சிலிங் பெற்றபிறகு தற்போது சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளார். பின்னர் தன் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தையும் அவர் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். இந்த கதையானது அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.