Categories
மாநில செய்திகள்

மனைவியுடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு…. வைரலாகும் புகைப்படம்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த முறை பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப் பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் சென்று சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சன்னிதானத்தில் பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைடலாகி வருகின்றன.

Categories

Tech |