செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் அருகே ஞானவேல் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் பூஜா(3), ஐஸ்வர்யா(5) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இதில் ஞானவேல் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார். இதனிடையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த ஞானவேல் தனது குழந்தைகள் பூஜா மற்றும் ஐஸ்வர்யாவுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.