கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசடையான்குளம் பகுதியில் சின்னதுரை- மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவியும், 8 மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மணிகண்டனுக்கும், உமாவுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மணிகண்டன் உமாவை தாக்கியதால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் உமா தனது குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது தாயார் உடல் நிலை பாதிப்பு காரணமாக சாப்பிடும் மாத்திரையை அளவுக்கு அதிகமாக தின்று மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனாவும் அதிகளவு மாத்திரையை தின்றுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். மீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.