மெக்கானிக் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஜீவா நகரில் சுரேஷ்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கும் அவரது மனைவி மலைச்செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று சுரேஷ் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் கடைக்கு சென்ற மலை செல்வியின் சகோதரர் கணேசன், சித்தி மகன் கார்த்திக் ஆகியோர் சுரேஷிடம் தகராறு செய்துள்ளனர்.
இதில் கோபமடைந்த வாலிபர்கள் சுரேசை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சுரேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.