Categories
தேசிய செய்திகள்

மனைவியின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு… திரும்பச் செல்லும் போது ஏற்பட்ட விபத்து… பிறந்த நாளே இறந்த நாளான சோகம்..!!!

பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதிகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டத்தை சேர்ந்த கஜனன் வைட் என்பவரின் மனைவி செயங் வைட். நேற்று செயங் வைட்க்கு பிறந்தநாள் என்பதால் கணவன் மனைவி இருவரும் அவர்களின் மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பிறந்த நாளை கொண்டாடி விட்டு பின்னர் தனது மகள் வீட்டில் இருந்து கார் மூலம் கணவன் மனைவி மற்றும் மேலும் மூன்று உறவினர்களை அழைத்துக்கொண்டு தம்பதி வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலை எதிரே வேகமாக வந்த டெம்போ தம்பதிகள் பயணித்த கார் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே செயங் வைட் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கணவர் மற்றும் உறவினர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கஜன் வைட் வைத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். எஞ்சிய 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |