Categories
தேசிய செய்திகள்

“மனைவியின் சிகிச்சை” வீட்டை மாற்றி அமைத்த கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சிகிச்சை தேவைப்படும் மனைவிக்காக வீட்டை அவசர சிகிச்சை பிரிவாக மாற்றிய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஜபல்பூரில் வசிப்பவர்கள் கியான் பிரகாஷ்-குமுதாணி    தம்பதியினர். குமுதானி ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு நான்கு வருடங்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் மனைவிக்கு வீட்டில் வைத்து சிகிச்சை கொடுக்க நினைத்த கியான் பிரகாஷ் தங்கள் வீட்டை முழு வசதிகள் அடங்கிய அவசர சிகிச்சை  பிரிவாக மாற்றியுள்ளார். ஒவ்வொரு நொடியும் தனது மனைவிக்கு தேவையான மருத்துவ உதவிகளை அதிக அன்புடன் செய்து வருகின்றார் கியான் பிரகாஷ்.

அவசர சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்ட அறையில் காற்று சுத்திகரிப்பான், வென்டிலேட்டர் உட்பட பல மருத்துவ கருவிகள் வைத்துள்ளார். எந்த மருத்துவ பயிற்சியும் பெறவில்லை என்றாலும் தனது மனைவிக்கு தேவையான மருத்துவ வசதிகள் அனைத்தையும் கியான் பிரகாஷ் கொடுத்துள்ளார். இதனை அறிந்த பலரும் குமுதாணி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கின்றனர். வீட்டை  அவசர சிகிச்சைப் பிரிவாக மாற்றிய கியான் தனது காரையும் ஆம்புலன்ஸாக   மாற்றியுள்ளார். இவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் நிலையில் தினமும் தங்கள் பெற்றோருடன் வீடியோ காலில் பேசி வருகின்றனர்.

Categories

Tech |