மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 27 வயதான போலீஸ் பெண் கான்ஸ்டபிளுக்கும், 31 வயதான ஒருவருக்கும் சென்ற 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 5 வயதில் 1 பெண் குழந்தையும் இருக்கிறது. இதனிடையில் திருமணத்துக்கு முன்னதாகவே பெண் போலீஸ் வேறொரு நபருடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதை மறைக்காமல் தன் கணவரிடமும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் குழந்தை பிறந்த பின் கணவருக்கு அப்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி இருவருக்கும் இஎடையில் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுக்கு முன் இருவரும் பிரிந்ததை அடுத்து, அந்த பெண் மும்பையிலும் அவரது கணவர் புனேவிலும் வாழ்ந்து வருகிறார்கள். எனினும் அப்பெண் மாதம் ஒருமுறை புனேவுக்கு சென்று கணவரை பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அந்த நபர், பெண்ணின் அந்தரங்க மற்றும் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் தொடக்கத்தில் மறுத்தவர் பின் சில புகைப்படங்களை கணவருக்கு வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பியுள்ளார்.
இதனை வைத்துக் கொண்டு தனது வாட்ஸ் அப்பில் குழு ஒன்றை உருவாக்கி அதில் மனைவியின் நண்பர்கள், உறவினர்களை அந்த நபர் இணைத்துள்ளார். மேலும் அந்த குழுவில் மனைவியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அப்பெண் கான்ஸ்டபிள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அப்பெண்ணின் கணவரை மும்பை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.