தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் தந்தி காலனியில் தெய்வானை என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த மே மாதம் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.அதில் ஒருவர் மனவளர்ச்சி குன்றியவர், மற்றொருவர் இருதயநோய் குறைபாட்டுடன் பிறந்தவர். இந்நிலையில் வருமானம் ஏதும் இல்லாமல் இரண்டு பிள்ளைகளை வைத்து கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு சென்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜாவை சந்தித்து மனு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் பரிசளித்துள்ளார்.
அதன்பிறகு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்குள் அந்த பெண்ணிற்கு தூத்துக்குடி சிப்காட் நில எடுப்பு பிரிவில் அலுவலக உதவியாளராக தற்காலிக பணி ஆணையை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகு தெய்வானை தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துச் சென்றார். இச்சம்பவம் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.