மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டி கொண்ட வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் மிரான்ஷா எனும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சந்தை வழியாக ராணுவ பாதுகாப்பு படையினரின் வாகனம் சென்றுள்ளது. அப்பொழுது ஒரு நபர் தனது உடலில் மனித வெடிகுண்டை கட்டிக்கொண்டு ராணுவ பாதுகாப்பு படையினரின் வாகனத்திற்கு முன் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் மனித வெடிகுண்டாக மாறிய அந்த மர்ம நபர் திடீரென அதனை வெடிக்க செய்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பில் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 3 குழந்தைகளும், 3 ராணுவ வீரர்கள் அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தைக் குறித்து பாகிஸ்தான் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப்
கூறியதாவது, “அப்பாவி குழந்தைகளை கொலை செய்த காட்டுமிராண்டிகளை பிடிக்கும் வரை ஓயமாட்டோம்” என்று கூறியுள்ளார்.