மனித உரிமை மாநாட்டில் பல நாட்களாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் சார்பில் மனித உரிமை மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாடு நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி நடைபெற்றுள்ளது. இது தமிழ் மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையிலுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியும் அவரது ஒப்புதல் கிடைக்காததால் அவர்கள் இன்னும் சிறையில் உள்ளனர். இதுபோன்று பல நாட்களாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மனிதநேயத்தோடு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.