வடகொரியாவில் மனித உரிமைகள் அத்து மீறல்களை கண்டித்து சுவிஸ் நிர்வாகம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் மனித உரிமைகள் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான சுவிஸ் பிரதிநிதியான பெலிக்ஸ் பௌமான் மனித உரிமை பேரவையில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் அறிவித்த அறிக்கையில் மனித உரிமைகள் குறித்து எந்த ஒரு முன்னேற்றமும் வடகொரியாவில் இல்லை. இது குறித்து சுவிஸ் நிர்வாகம் வேதனை அடைவதாக கூறியுள்ளார். மேலும் மனித உரிமை அத்துமீறல்கள், கட்டாய உழைப்பு, தடுப்பு மையங்களில் சித்திரவதை ஆகிய செயல்கள் வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என எண்ணும் மக்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என கூறுவது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா அதிகரிப்பால் மக்களை துன்புறுத்துவதாகவும், தனிமையில் வைக்கப்பட்டுள்ள மக்களை கைது செய்து சுட்டுக்கொல்ல உத்தரவிடுவதும் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார். இதை சுவிஸ் நிர்வாகம் வன்மையாக கண்டிக்கிறது எனவும் கூறியுள்ளார். எனவே உலக நாடுகள் இதனை கருத்தில் கொண்டு தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.