Categories
மாநில செய்திகள்

மனிதர்களை தூக்கிச் செல்லும் சூறாவளி காற்று…. யாரும் போகாதீங்க… கடும் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கர்நாடக கடலோரப் பகுதி,லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் மனிதர்களை தூக்கி செல்லும் அளவுக்கு சூறாவளி காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |