Categories
தேசிய செய்திகள்

மனிதன் பட பாணியில் கார் மோதி 4 பேர் கொலை….!! பெரும் சோக சம்பவம்….!!

ஹைதராபாத்தில் நடைபாதையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் 4 பேர் கார் மோதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் மாநிலம் கரீம் நகர் பகுதிக்கு அருகே உள்ள காமன் சந்திப்பு பகுதியில் தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்துவிட்டு நடைபாதை பகுதியில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று நடைபாதையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் மீது மோதியுள்ளது. இதில் 4 தொழிலாளர்கள் உடல் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன மற்றும் ஒரு நபரின் உடல் மற்றும் முகப் பகுதி அதிக அளவில் சேதம் அடைந்துள்ளதால் அந்த நபர் குறித்த எந்த விபரமும் அறியப்படவில்லை. கார் டிரைவர் குடித்துவிட்டு காரை இயக்கியது தான் இந்த கோர விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர் வேகமாக சென்ற கார் டிரைவரை பிடிக்க முயற்சித்தபோது கார் டிரைவர் மற்றும் அவருடன் காரில் பயணித்து வந்தவர்கள் பொதுமக்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளனர். மனிதன் பட பாணியில் இவ்வாறாக நடைபாதையில் அமர்ந்திருந்த அப்பாவி தொழிலாளர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |