விருதுநகர் மாவட்டம் திருவிருந்தாள்பட்டியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய பெற்றோர் வேலை காரணமாக வெளியில் சென்று விடுவார்களாம். இதனால் அந்த சிறுமி தினமும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான கருப்பசாமி என்ற மனோஜ் (வயது 48) அந்த சிறுமியிடம் நைசாக பேசி பலமுறை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சிறுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்துள்ளனர்.