Categories
மாநில செய்திகள்

மனரீதியாக மாணவர்கள் பாதிக்கபடுவதை தடுக்க….. புதிய திட்டம்….. தமிழக அரசு அதிரடி….!!!!!!

பள்ளி மாணவர்களிடையே மனநலம் மற்றும் உடல் நல சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை அசோக் நகர், அரசு மகளை மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மனரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும். பள்ளிகளில் மருத்துவ முகாம், தன்னம்பிக்கை குறும்படம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |