Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை…. கூலித்தொழிலாளி செய்த கொடூரம்…. சிசிடிவியில் சிக்கிய காட்சி….!!!!

சென்னை திருநின்றவூரில் பச்சையப்பன் என்பவர் புதிதாக வீடு கட்டிவருகிறார். நேற்று முன்தினம் பச்சையப்பன் வீட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்தார். மேலும், அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாக இருந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நத்தம்பேடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அழகேசன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்ட இவர் ஜனவரி 30 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வுசெய்தனர். அப்போது, கேமராவில் நடுக்குத்தகை பகுதியை சேர்ந்த சக்திவேல் (32) என்ற கூலித்தொழிலாளி அப்பெண்ணை இழுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் சக்திவேலைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் பட்டப்பகலில் அப்பெண்ணை பச்சையப்பன் வீட்டுக்கு இழுத்துச் சென்று வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி பின்னர் கொலை செய்தது தெரியவந்தது. கொலைக்கான தடயங்களை மறைக்க ரத்தக் கறைகளை தண்ணீர் ஊற்றி அழித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |