மனநலம் பாதிக்கப்பட்டு அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிந்தவருக்கு புது ஆடை அணிவித்த காவலர்களுக்கு பாராட்டுகிறது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் என இரண்டு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அரை குறை ஆடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த இரண்டு காவலர்களும் கடை வீதிக்கு சென்று புது ஆடைகளை வாங்கி வந்து அந்த நபருக்கு அணிவித்து விட்டனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி இரண்டு காவலர்களுக்கும் பாராட்டுகளை குவித்து வருகின்றது. அதுமட்டுமன்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை அவர்கள் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயனை நேரில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.