வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகள் இருவரும் கழுத்தறுக்கப்பட்டமர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜர்தா கொல்லை மலை என்ற கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் தனது மனைவி பாஞ்சாலி உடன் வசித்து வந்துள்ளார். அதன்பிறகு பொன்னுசாமி தீபா என்ற 10 வயது மகளுடன் தங்கப்பன் கொட்டாய் பகுதியில் இருக்கின்ற ஒருவரது நிலத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், ஒரே வீட்டில் மனைவி தனி அறையிலும், தந்தை மற்றும் மகள் தனி அறையிலும் இருந்து வந்துள்ளனர்.
இன்று காலை பொன்னுசாமி நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது தந்தை மற்றும் மகள் இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். பக்கத்து அறையில் இருந்த அவரின் மனைவிக்கு எதுவும் ஆகவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.