Categories
தேசிய செய்திகள்

மனதை கல்லாக்கி கொண்டு… “4 வயது மகனை தூக்கில் தொங்கவிட்ட பெற்றோர்”… அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

கேரளாவில் தனது 4 வயது மகனை கொன்றுவிட்டு பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த சுனில் என்பவரின் மனைவி கிருஷ்ணேந்து. இவர்களுக்கு 4 வயதில் ஆதவ கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறா.ர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சுனிலின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அங்கு சென்று கதவை தட்ட முயன்றபோது கதவு தானாக திறந்து கொண்டது .உள்ளே சென்று பார்த்தால் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் அறையில் சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

கட்டிலில் கணவன் மனைவி இருவரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முதலில் மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு, பின்னர் இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. மகனை கொலை செய்துவிட்டு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |