கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பள்ளியிலிருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியான துயர சம்பவம் நடந்த நாள் இன்று. அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்லாமல், அனைவருடைய நெஞ்சையும் உலுக்கியது. இந்த தீ விபத்து நடந்து இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் அந்த பள்ளியின் முன்பு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூடி, குழந்தைகளின் உருவப்படங்களை வைத்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் விட்டு அழுதனர்.
Categories
மனதை உலுக்கிய கொடூர சம்பவம்…. 17 ஆண்டுகளை கடந்தது…!!!
