மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகரான ப.ழ கருப்பையா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூத்த அரசியல் தலைவரான ப.ழ கருப்பையா கட்சிக்கு கட்சி தாவி வருவதால் கட்சி தாவலுக்கு பெயர் போனவர். பாஜக, திமுக, காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ், மதிமுக, அதிமுக, மீண்டும் திமுக என்று எட்டு முறை கட்சிக்கு கட்சி தாவி வந்த அவர், தற்போது மக்கள் நீதி மையம் கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். இந்நிலையில் அவர் மக்கள் நீதி மையத்தில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி நிறுவனத்தின் பேட்டி ஒன்றின் போது பேசிய பழ கருப்பையா, மக்கள் நீதி மையம் கட்சி ஆலோசகராக இருக்கும் நீங்கள் என்னென்ன ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கினீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் நீதி மையம் தலைவர்களும் என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை. நானும் கொடுக்கவில்லை. கௌரவத்திற்காக தான் அங்கு எனக்கு இந்த பதவியை கொடுத்துள்ளார்கள் என்று பதில் சொன்னார். உண்மையிலேயே மக்கள் நீதி மையத்தை விட்டு விலகும் எண்ணம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சியை விட்டு விலகும் காரணம் இப்போதைக்கு எதுவுமே கிடையாது என்று பேசியுள்ளார்.
உண்மையில் மக்கள் நீதி மையம் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை போலிருக்கிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஏதோ பண்றாங்க. என்ன பண்றாங்கன்னு பாக்கலாம் என்று கூறினார். பழ கருப்பையாவின் இந்த பேட்டியையெல்லாம் பார்க்கும் பொழுது மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இதையெல்லாம் பார்த்தால் அவர் விரைவில் கட்சியில் இருந்து விலகி வேறொரு கட்சியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.