நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு சென்றவர்கள் எல்லோரும் திரும்பவும் தங்களது சொந்த மதத்துக்கு திரும்ப வேண்டுமென்று சமீபத்தில் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு வழக்கம்போல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், விமர்சனத்துக்கும் ஆளானது. சீமானின் இந்த கருத்தையடுத்து #சங்கி_சீமான் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. இந்த நிலையில் சீமான் இப்படி மத அரசியல் செய்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து, கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாஜக ஆட்சியில் பெட்ரோல்,டீசல் ரூ.100, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ 1000.கடும் பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் வேலையில்லாமல்,வறுமையில் வாடுகிறார்கள். பாஜக,மோடிக்கு எதிரான கோபம் உச்சத்தில் இருக்கிறது. இதிலிருந்து பாஜகவை காப்பாற்றவே சீமான் மத அரசியல் செய்கிறார். #சங்கி_சீமான்” என்று தமது ட்விட்டர் பதிவில் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.