ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஏனென்றால் இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய நாடு.
குழப்பத்தை தவிரக்கவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கு கூட்டாட்சி அதிகாரத்தை தருகிறது. ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.