Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

மத்திய பாதுகாப்பு படை தமிழகத்திற்கு வரணும் – பாஜக பரபரப்பு கோரிக்கை …!!

நகர்ப்புற தேர்தல் குறித்து நடந்த அணைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டபின்பு பேசிய பாஜகவின் கரு.நாகராஜன், நகர்ப்புற தேர்தல் சம்பந்தமான அனைத்து கட்சி கூட்டம் இப்போது நடைபெற்றது. ஒரு மூன்று விஷயங்களுக்காக இந்த கூட்டம் நடைபெற்றது. முதலில் இந்த கொரோனாதடுப்பு வழி முறைகளை எப்படி கடைபிடித்து நாம் வாக்காளர்களை அழைத்து வரலாம் ? வாக்களிக்க செய்யலாம் என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. தேர்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

ஒரே கட்டமாக தான் நடக்க வேண்டும் என்று பாஜக சார்பில் எங்களுடைய மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதை நானும் கராத்தே தியாகராஜன் அவர்களும் வலியுறுத்தி சொன்னோம்.திரிணாமுல் காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து காட்சிகளுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

தேர்தல் நேரத்தில் போதுமான மத்திய பாதுகாப்பு படையை தமிழகத்திற்கு அழைத்து வரவேண்டும், மிகவும் பதற்றமான பகுதி, பதற்றமான மாநகராட்சிகளில் துணை ராணுவ படை வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடியவர்களுக்கு அனுமதிகள் வழங்குவதில் பல்வேறு பிரச்சனைகளை அந்த ஸ்டேஷன்ல இந்த ஏரியா எங்க ஏரியா இல்ல,

அங்க மீட்டிங் போட்டால் அந்த ஸ்டேஷனுக்கு வாங்க, இங்கே மீட்டிங் போட்டால் அங்க வாங்க என்று இல்லாமல் ஒற்றை சாளர அமைப்பு,  போட்டியிடக்கூடிய வேட்பாளர்களுக்கு எளிதாக தேர்தல் பணிகளை கவனிக்கும் வகையில்ஒற்றை சாளர அமைப்பில் தேர்தல் அதிகாரிகளை நியமிக்குறீர்கள் ஒரே இடத்தில் அனுமதி கொடுங்கள், தனித்தனியாக செய்யாதீர்கள் என்று சொல்லி இருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |